Loading...
 

எங்கள் லோகோ மற்றும் பெயர்

 

எங்களது பெயர்


Acropolis

 

உலகளவில், ஏதென்ஸ் நகரம் ஜனநாயகத்தின் பிறப்பிடமாக அறியப்படுகிறது. ஏதென்ஸின் பண்டைய Agora-வே பண்டைய கிரேக்க Agora-வின் சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. கிரேக்க நகரங்களில், கலை, அரசியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கையின் மையமாக Agora இருந்தது. குடிமக்கள் அனைவரும் தங்கள் அரசியல்வாதிகள் மற்றும் பேச்சாளர்கள் பேசுவதை கேட்பதற்கும், நகர வாழ்க்கையின் அனைத்து அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கும் அங்கு ஒன்று கூடுவர். இந்த வார்த்தையிலிருந்துதான் சொற்பொழிவு ஆற்றுவது அல்லது பிரகடனம் செய்வது என்ற பொருள் உடைய நவீன கிரேக்க வார்த்தை ἀγορεύω பெறப்பட்டது.

 

கிரேக்கம் கிளாஸிக்கல் சொல்லாட்சியின் பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது - இதனைப் பற்றி முறையாக படிக்கும் பயிற்சி செய்யும் முதல் பள்ளிக்கூடங்களை இது பிறப்பித்தது. உண்மையில் சொல்லப்போனால், இன்றைய நவீன கால பொது சொற்பொழிவாற்றும் நடைமுறைகள் அனைத்தும் இந்த முதல் பள்ளிகளிலிருந்தே காணப்படுகின்றன.

 

உச்சரிப்பு

Agora என்னும் வார்த்தை, முதலில் உள்ள 'A' எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உச்சரிக்கப்படுகிறது. முழு ஒலிப்பு குறியீடு /ˈa-gə-rə / (தமிழ் உச்சரிப்பு 'அகோரா').

உதாரணமாக இங்கே அதன் உச்சரிப்பை நீங்கள் கேட்கலாம்: https://www.dictionary.com/browse/agora

 

நாம் எப்படி அழைக்கப்படுகிறோம்?

 

Agora உறுப்பினர்கள் என்பதைத் தவிர, "Agora உறுப்பினர்கள்" என்பதற்கு அதிகாரப்பூர்வமான வேறொரு சொல் இல்லை என்றாலும், எங்கள் உறுப்பினர்கள் பலர் தங்களைத் தாங்களே "Agoreans" என்று அழைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இந்த வார்த்தையில் "o" என்ற எழுத்து உச்சரிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும், இதன் ஒலிப்பு குறியீடு /a-'go-ri-əns /.

 

எங்களது லோகோ

லோகோவானது இந்த பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக நிகழுகிறது, மேலும் இந்த அமைப்புக்கான எங்கள் எல்லா விருப்பங்களையும் பிரதிபலிக்கிறது. வெளிப்படையானது, மக்களுக்கானது, ஆர்வத்தை தூண்டுவது மற்றும் நோக்கம் உடையது.

 

600 247

 

இது நான்கு கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது:

  • மூன்று கிரேக்கத் தூண்கள் ஜனநாயகத்தின் பிறப்பிடம், நாம் நம்பும் மற்றும் பாதுகாக்கும் நித்தியக் கொள்கைகள் மற்றும் எங்கள் அமைப்பின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுடனான நமது தொடர்பைக் குறிக்கிறது.
  • கிரேக்க ஆம்பிதியேட்டரின் ஸ்டைலான படமானது பார்வையாளர்களையும், உலகம் முழுவதும் அலைகள் போன்று பரவக்கூடிய தகவல்களை தலைவர்கள் வழங்குகிறார்கள் என்பதையும் குறிக்கிறது.
  • அமைதியான ஆனால் உறுதியான போஸில், அகலமாக திறந்த கை சைகையுடன் நிற்கும் பேச்சாளரின் நிழல் படம் தலைமைத்துவத்தின் இலட்சியங்களான பார்வையாளர்களை இலக்கை அடைதல், உரையாடல், அமைதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்கிறது.
  • சுடர்கள் பேச்சாளரின் அதீத ஆர்வம் மற்றும் அறிவை பிரதிபலிக்கின்றன.

 

Agora Speakers International முதலில் ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டிருந்தது. Agora உடைய நிறங்கள் ஸ்பானிஷ் கொடியை ஒத்திருப்பதாக சிலர் குறிப்பிட்டனர். உண்மையில், இது முற்றிலும் தற்செயலானது, ஏனென்றால் அசல் லோகோ வடிவமைப்பு பற்றிய சுருக்கவிவரம், நிறங்களானது ஆழமான உணர்வு மற்றும் பேரார்வம் பற்றிய கருத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

 

 


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Wednesday August 4, 2021 22:00:48 CEST by shahul.hamid.nachiyar.